தமிழக அரசு அதிரடி
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற பத்தாம் வகுப்பு மாணவி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பதோடு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும் செய்தார்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்த்தபோது ஜெயஸ்ரீயை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கூறியதோடு, டாஸ்மார்க் குறித்தும் சில கருத்துக்களை காரசாரமாக தெரிவித்தார்
இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவரான பிரேமலதா மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது