தனுஷின் ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் ஏன்? புதிய தகவல்
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித் ‘விஐபி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 11 முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சற்றுமுன் தனுஷ் தனது டுவிட்டரில் ‘விஐபி 2’ படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பு ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார். இந்த இரு மொழிகளிலும் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழில் வெளியாகும் தேதியில் மாற்றம் இல்லை என்பதை தனுஷ் உறுதி செய்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ளனர்.
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.