குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம்: கேரள பெண் எழுத்தாளர் மீது வழக்கு பதிவு
குழந்தைக்கு பாலூட்டும் படம் வகையில் ஒரு மலையாள பத்திரிகையில் புகைப்படம் ஒன்று வெளியானதையடுத்து, அந்த பத்திரிகையின் பதிப்பாசிரியர் மீதும், எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாளத்தில் கிரிகலட்சுமி என்ற இதழ் வாசகர்களிடையே புகழ்பெற்றது. இந்த இதழின் அட்டைப்படத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய் போன்ற ஒரு போஸ் பிரசரிக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
பொது வெளியிடங்களில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக இந்த போஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படினும், இந்த போஸ் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு பாரட்டுக்களும் எதிர்ப்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில், கிரிகலட்சுமி இதழின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் ஜிலு ஜோசப் ஆகியோர் மீது கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் கிரிகிலட்சுமி இதழில் இந்த படம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
A complaint has also been lodged with the State Child Rights Commission.