திருப்பதி கோவில் ரகசியத்தை லீக் செய்த நேஷனல் ஜியாக்கிரபி சேனல்.
உலக புகழ் பெற்ற திருப்பதி திருமலை கோவில் குறித்த பல விஷயம் அங்கு வழக்கமாக சென்று கொண்டிருக்கும் பக்தர்களுக்கே தெரியாது. இந்நிலையில் திருப்பதி கோவில் குறித்து மிக விரிவான, நேரடியாக குறும்படம் பிடிக்கப்பட்ட திரைப்படம், ‘நேஷனல் ஜியாக்கிரபி டிவி’ சேனலில் ஒளிபரப்பாகி உள்ளது.
ஆந்திராவில் அமைந்துள்ள, திருப்பதி திருமலை கோவிலில் தரிசனம் செய்வதற்கு, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் குறித்து, பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், முதன்முறையாக, கோவிலின் பல்வேறு பகுதிகளில், நேரடியாக, கோவிலின் சிறப்பம்சம் குறித்து விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள குறும்ப்டம் ஒன்றை ‘நேஷனல் ஜியாகரபி’ என்ற, ‘டிவி’ சேனலில் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது.
இந்த படத்தை எடுத்த ராஜேந்திர ஸ்ரீவத்சா கோண்டபள்ளி என்பவர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய சமையலறை என்ற பெயரில், திருமலை கோவில் சமையலறை குறித்து படம் எடுக்க விரும்பினோம். அதற்கான அனுமதி கிடைத்து, படம் எடுத்தோம். அப்போது தான், இந்த கோவிலின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து தெரிய வந்தது. அதை தொடர்ந்து, கோவில் ஆகம விதிகளை மீறாமல், கோவிலின் பல்வேறு பகுதிகள் குறித்தும் படம் எடுத்தோம். கோவிலின் கருவறை, பக்தர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தும் முறை என, பல பிரமிப்புகள், இந்த படத்தை பார்க்கும் போது ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.