டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென ஆயிரக்கணக்கான ஐ.டி.ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நேற்று பெங்களூரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
முதல் முறையாக தொழிற்சங்கள் அல்லது தொழிலாளர் அமைப்புகள் ஆகியவற்றின் உதவியின்றி தொழிலாளர்களே நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதச்சங்கியில் ஆயிரக்கணக்கான ஐ.டி.ஊழியர்கள் கலந்து கொண்டு இந்த விஷயத்தில் கர்நாடக மற்றும் மத்திய அரசு தலையிட்டு தங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுளனர்.
டிசிஎஸ் வேலைநீக்கம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக மாநில தகவல்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், தொழிலாளர் உரிமைகளை மீறும் வகையில் டி.சி.எஸ். நிறுவனம் செயல்பட்டு இருந்தால் அது அரசின் தலையீட்டுக்கு உட்பட்டதே என்றும், கண்டிப்பாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய அமைச்சர் அதே நேரத்தில் தொழிலாளர்களும் தங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.