காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

cauveryகாவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிரான வழக்குகளை , காவிரி நதிநீர் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு . மத்திய அரசின் ஆட்சேப மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு . இது குறித்து கூடுதல் உத்தரவுகளை டிசம்பர் 15ம் தேதி பிறப்பிக்கப்படும் என்று அறிவிப்பு

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் தமிழகம் கேரள அரசுகள் ஆதரவாகவும் கர்நாடகாவும், மத்திய அரசும் எதிர்த்தும் வாதம் செய்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிஅலியில் தற்போது இந்த மனுமீதான தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் காவரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீடு மனுவை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் மத்திய அரசின்  கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் தமிழகத்திற்கு கர்நாடாகா டிசம்பர் 15ஆம் தேதி வரை 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டனர்.

Leave a Reply