நவம்பர் 17ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தி கொண்டே சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது இதன்படி உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட வேண்டும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு செப்டம்பர் அதாவது இம்மாதம் 18ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்