பாஜகவுக்கு எதிராக பீகாரில் மெகா கூட்டணி.

பாஜகவுக்கு எதிராக பீகாரில் மெகா கூட்டணி.

biharபீகார் மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் வருவதற்கு வாய்ப்ப்பு இருக்கின்றது. எனவே தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் மாநிலத்தின் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் முதன்முதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நிதிஷ் குமார், லாலு பிரசாத், காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது.

பா.ஜ.க.வை எதிர்கொள்ள வலிமையான கூட்டணி தேவை என்பதால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையும் நேற்று முடிவடைந்தது. இதன்படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 100 தொகுதிகளும், 40 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த மெகா கூட்டணி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தபோது, ”எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி காட்டுவதற்கு எங்கள் அரசியல் எதிரிகள் முயற்சித்தனர். ஆனால், அந்த யூகங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. இணக்கமான முறையில் தொகுதிப்பங்கீடு எங்களுக்குள் முடிந்து விட்டது. ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 100 தொகுதிகளும், 40 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் முடிவு எடுக்கப்படவில்லை.

Leave a Reply