ஓபிஎஸ் மகன் மீது கொலை வழக்கு. முன் ஜாமீன் கிடைக்குமா?
ஏப்ரல் 12ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களின் மோதல் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று இரவு இரு அணி ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் முன்னாள் முதல் ஓ.பன்னீசெல்வம் மகன் மற்றும் அவரது சகோதர் ஓ.ராஜா மீது தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்த அடிப்படையில் போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது முழுக்க முழுக்க பொய்வழக்கு என்றும், இந்த பொய் வழக்கில் ஓபிஎஸ் மகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தினகரன் அணியினர்களின் பணப்பட்டுவாடா காரணமாக அவர் தேர்தலில் நிற்க தகுதி நீக்கம், அல்லது தேர்தல் ரத்து ஆகியவை குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வர வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.