பாரம்பரியத்தை காக்க ஒரு புதிய் செயலி

பாரம்பரியத்தை காக்க ஒரு புதிய் செயலி

technologyநாட்டில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்களைப் பராமரிப்பதும், பேணிக் காப்பதும் அரசின் கடமை மட்டும் அல்ல. பொதுமக்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் மக்களும் அரசுக்கு உதவும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சகம் ‘ஸ்வச் பர்ய‌த்தன்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகால் உள்ளிட்ட பாரம்பரியச் சின்னங்களைச் சுற்றி உள்ள குப்பைகள், அசுத்தங்கள் மற்றும் பிற பாதிப்புகள் பற்றி ஒளிப்படத்துடன் புகார் செய்ய‌லாம்.

இவை அதற்குரிய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் 25 பாரம்பரியச் சின்னங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை மெல்ல விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?

Leave a Reply