முதல்முறையாக தயாராகியுள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மசோதா.

முதல்முறையாக தயாராகியுள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மசோதா.
beggars
தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமே இல்லை என கூறலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பிச்சை எடுப்பது குற்றம் என்றும் பிச்சை எடுத்தால் தண்டனை என்ற சட்டம் அமலில் இருப்பதால் அந்த மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர்.

தீராத நோய், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர் என பல காரணங்களால் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களின் மறுவாழ்விற்காக ஒரு புதிய மசோதா ஒன்றை முதன்முதலாக மத்திய அரசு தயார் செய்துள்ளது. பிச்சை எடுக்காமல் அவர்களும் சமூகத்தில் தன்மானத்துடன் வாழும் வகையில் இந்த மசோதா தயாராகி வருவதாகவும், விரைவில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மசோதாவில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

1. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வறுமை, நோயினால் பாதிக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இந்த மசோதாவினையும், அதனுடைய பயனையும் தெரிவித்தல்.

2. அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு, தகுந்த மறுவாழ்வு அளிப்பதோடு, அவர்களின் திறமைகளை வெளியே கொண்டுவர, தனித்தனியாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல். பாதுக்காப்பான இடங்களில் மருத்துவர், சமூக ஆர்வலர், மனநல சிகிச்சையாளர் ஆகியோரின் கண்காணிப்பில் அவர்களை வைத்திருந்தல்.

3. பெண்கள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்காக தனித்தனியாக இடங்களை ஒதுக்கி அவர்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் அளித்தல்.

4. வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து பாதிக்கப்பட்ட மனநிலையில்  இருப்பவர்களுக்கு மனதளவில் ஒரு மாற்றத்தையும், ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அவர்களாலும் சமூகத்தில் நல்ல நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்துதல்.

5. இந்த திட்டங்களை மாநிலம் முழுக்க சிறப்பாக நடப்பதை கவனிக்கவும், இதனை மேலும் சிறப்பாக நடத்துவதற்காக தனியாக ஒரு கண்காணிப்பாளரை நியமித்தல்.

7. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட சமூகத்துறை அலுவலரின் கீழ்  இத்தகைய திட்டங்கள் செயல்பட இருக்கின்றன. மாநில அளவில் இந்த திட்டத்திற்கு சமூக நலத்துறை இயக்குநர்தான் தலைவர்.

Leave a Reply