2 நாளில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்திற்கு சோதனை மேல் சோதனை

அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.