ஆண்ட்ராய்டில் புதிய வசதி

unlock_2355085h

ஸ்மார்ட் போன் கையில் இருக்கும்போதே லாக் ஆகிவிடுகிறதா? இதற்குத் தீர்வாக போன் உங்கள் கைகளில் இருக்கும்போது அது நடுவே லாக் ஆகாமல் இருக்க ஸ்மார்ட் லாக் அறிமுகமாகியுள்ளது.

மாறாக போனை கீழே வைத்துவிட்டால் அது தானாக லாக் ஆகிவிடும். ‘ஆன் பாடி லொகேஷன்’ எனும் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது.

அதாவது, போனில் உள்ள ஆக்சிலரோமீட்டர் மூலம் அது கையில் இருக்கிறதா அல்லது கீழே வைக்கப்பட்டுள்ளதா என உணர்ந்துகொள்கிறது.

இந்த வசதியை பயன்படுத்த ஸ்மார்ட் லாக் வசதியில் ஆன் பாடி லொகேஷனைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 5.0 தேவை.

ஆனால் ஒன்று, போனை அன்லாக் செய்யாமல் வேறு ஒருவரிடம் கொடுத்தால் அதே நிலையில் நீடித்திருக்கும்.

Leave a Reply