விஜய், சமந்தா நடிப்பில் வரும் தீபாவளிக்கு திரையிட உள்ள ‘கத்தி’ திரைப்படத்திற்கு ஆதரவாக செய்தி வெளியிட கத்தி படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒருசில ஊடகங்களுக்கு பணம் கொடுக்கபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று இன்று காலை முதல் கோலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கின்றது.
விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட முக்கிய ஊடகங்கள் அனைத்தும் ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கே கொடுத்து வருகின்றன. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் மேக்கப் சாதனை, மிகப்பெரிய அளவில் செலவழிக்கப்பட்ட பட்ஜெட் என தினந்தோறும் ‘ஐ’ படம் குறித்து முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கத்தி படத்தின் செய்திகளை ஒரு ஓரத்தில் சிறிய அளவில்தான் அந்த ஊடகங்கள் வெளியிடுகின்றன.
இதனால் அதிர்ச்சி அடைந்த கத்தி படக்குழுவினர் ஒருசில ஊடகங்களுக்கு பணம் கொடுத்து தங்கள் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் செய்தி வெளியிடுமாறு கூறியதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் ஒருசிலர் வேண்டுமென்ற இந்த வதந்தியை தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் பரப்பிக்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கத்தி படக்குழுவினர்கள் கூறியபோது, ‘விஜய் போன்ற மாஸ் நடிகருக்கு விளம்பரமே தேவையில்லை. அப்படிப்பட்ட அவருடைய படத்திற்கு பணம் கொடுத்து செய்தி வெளியிடசொன்னதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே ஒரு முன்னணி வார இதழ் நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் விஜய் பணம் கொடுத்த வாங்கியதாக ஒரு புரளி கிளம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.