கங்கை நதியை தூய்மைப்படுத்த புதிய அமைச்சர். மோடிக்கு உமாபாரதி பாராட்டு

8
இந்திய மக்கள் புனிதமாக கருதும் கங்கை நதியின் புனிதப்படுத்தவும், நதியை தகுந்த முறையில் பாதுகாக்கவும் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

மத்திய நீர் வளத் துறை, நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் அமைச்சராக நியமிக்கப்பட்ட உமா பாரதி, நேற்று  “ஷ்ரம் ஷக்தி’ பவனில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

எனது வாழ்வில் அமைச்சராக பதவியேற்ற இந்த நாள் மிகவும் அர்த்தமுள்ளதாக மாறியுள்ளது. இந்து மக்களின் புனித நதியாகிய கங்கை நதியைத் தூய்மையாக்கி, அதன் பழமையான பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கங்கை நதியை தூய்மைப்படுத்த புதிய அமைச்சரை நியமனம் செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, கங்கை நதியின் புனிதத்தை காக்க “அவிரல் கங்கா நிர்மல் கங்கா’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் புனிதப்படுத்தும் பணி நடைபெறும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தில் ஒன்று கங்கை நதியை புனிதப்படுத்தும் திட்டமும் ஒன்று என்று நீர்வளத்துறையின் இணை அமைசர் சந்தோஷ் குமார் அவர்களும் கூறியுள்ளார்.

Leave a Reply