பேச்சுவார்த்தை நடத்த தயார்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்

பேச்சுவார்த்தை நடத்த தயார்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண தொழிற்சங்கங்களுடன் பேச அரசு தயார் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில் வேலைநிறுத்தம் செய்த நாட்களில் ஊதியம் கிடையாது என்றும், தொழிலாளர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் வாபஸ் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஒருசில ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நாளை முதல் பொங்கல் பண்டிக்கைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ள நிலையில் அதற்குள் பேச்சுவார்த்தை நடந்து அதில் சுமூக முடிவு ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply