ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமர் பதவியேற்பு
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் என்பவர் பதவி வகித்து வந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.
இதனையடுத்து ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரதமர் மரியானா ரஜாய் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரஜாய் விலகினார்.
இதனை அடுத்து, பெட்ரோ சான்செஸ் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 பேரும் வாக்களித்தனர். பெட்ரோ சான்செஸ் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சான்செஸ் பிரதமாராக தேர்வு செய்யப்பட்டார்