செயல் தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்? திமுகவில் புதிய பதவி உருவாக்கம்.

stalinவரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் 11வது முறையாக திமுக தலைவராக மு.கருணாநிதி தேர்வு செய்யப்படவுள்ள நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்காக புதிய பதவியை உருவாக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து திமுகவின் முன்னணி தலைவர்கள் சிலர் கூறியதாவது, ” திமுக தலைவர் கருணாநிதி 11-வது முறையாக மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் பதவி கொடுக்கும் வகையில் கட்சியில் புதிய பொறுப்பை ஏற்படுத்த கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவியில் அன்பழகன் இருப்பதால், ஸ்டாலினுக்காக செயல் தலைவர், துணைத் தலைவர் போன்ற பதவி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது.

ஒருவேளை ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்படும் சூழலில், அவர் ஏற்கெனவே வகித்துவரும் இளைஞர் அணிச் செயலாளர் (பொறுப்பு), பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவரது ஆதரவாளர்களை நியமிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply