கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு திடீர் சிக்கல்
கமல்ஹாசன் நடித்த பல படங்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து தான் ரிலீஸ் ஆகிறது. கமல்ஹாசன் நடித்த படம் ஒன்றுக்கு ‘சண்டியர்’ என்று டைட்டில் வைத்தபோது பல அமைப்புகள் கொந்தளித்து இந்த பிரச்சனை முதல்வர் வரை சென்றதால் வேறு வழியின்றி கமல் பின்னர் ‘விருமாண்டி’ என்ற டைட்டிலை மாற்றினார். ஆனால் அதே சண்டியர்’ பெயரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வந்தது. கமல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த யாரும் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
அதேபோல் அவர் நடித்த விஸ்வரூபம் படமும் பெரும் பிரச்சனைகளை சமாலித்துதான் ரிலீஸ் ஆனது. இந்ந்லையில் தற்போது ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலில் நாயுடு என்ற ஜாதிப்பெயர் இருப்பதாகவும் இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்றும் இல்லையேல் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவையின் பொதுச்செயலாளர் இளங்கோவன் மற்றும் வக்கீல் ஜெயபால் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்த கோவை மாவட்ட ஆட்சியர் என்னவிதமான நடவடிக்கை எடுப்பார் என்பதையும் கமல் தனது படத்தின் டைட்டிலை மாற்றுவாரா? என்பது குறித்தும் பொறுத்திருந்து பார்ப்போம்.
கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் ‘சபாஷ் நாயுடு