வங்கக்கடலில் ‘உம்பன்’ புயல்:

தமிழகத்திற்கு பாதிப்பா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே இந்திய மக்கள் பெரும் சிக்கலில் உள்ள நிலையில் தற்போது வங்கக் கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது

உம்பன் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நாளை தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

வங்கக் கடலில் உருவான இந்த புயல் மே 20ஆம் தேதி மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்துக்கு இந்த புயலால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply