இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படமான மாஸ்’ படத்தில் திடீரென ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்லது.
மாஸ்’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த யுவன்ஷங்கர் ராஜா போட்ட ஒரு குத்துப்பாடலின் டியூன் சூர்யாவுக்கு பிடிக்காததால் அந்த பாடலை மட்டும் கம்போஸ் செய்ய பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமனிடம் சூர்யா அணுகியதாகவும், ஒரு ஆர்.ராஜ்குமார் என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் ரீமிக்ஸை தமன் தயார் செய்து சூர்யாவிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
மாஸ்’ படத்தின் ரிலிஸ் தேதி மே 1 என்று அறிவித்துவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய பாடல் ஒன்றினை கம்போஸ் செய்த யுவனின் பாடல் சூர்யாவை கவரவில்லை. எனவேதான் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகவும், சூர்யாவின் இந்த முடிவால் யுவன் மற்றும் வெங்கட்பிரபு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் பின்னணி இசை பணிகளை யுவன் நிறுத்திவிட்டதாகவும் இதனால் இந்த படம் திட்டமிட்டபடி மே 1ஆம் தேதி வெளிவருமா? என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நேற்று டுவிட்டர் இணையதளத்தில் சூர்யா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோர் இணைந்த புகைப்படம் வெளியாகியுள்ளதால் மேற்கண்ட தகவல் வதந்தி என்றும் கூறப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது இன்னும் சில நாட்களில் ஊடகங்கள் உறுதி செய்துவிடும் என்று கூறப்படுகிறது.