ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த 3D மோஷன் கேப்ஷன் திரைப்படமான கோச்சடையான் திரைப்படம் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் கோச்சடையான ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோச்சடையான் திரைப்படத்திற்கு முன்னர் ஈராஸ் நிறுவனம் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய மாற்றான் திரைப்படத்தை ரிலீஸ் செய்தது. ஆனால் மாற்றான் படத்தால் விநியோகிஸ்தர்கள் பெரும் நஷ்டம் அடைந்ததால், அடுத்த படமான கோச்சடையான் படத்தையும் அதே விநியோகிஸ்தர்களுக்கு தருவதாக வாக்களித்து ரூ.26 கோடியை முன்பணமாகவும் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது கோச்சடையான் படத்தை பேசியபடி கொடுக்காமல் வேறு விநியோகிஸ்தர்களுக்கு கொடுக்க இருப்பதால், மாற்றான் படத்தால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்கள் கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க கோரி புகார் கொடுத்துள்ளார்கள்.
ரஜினியிடம் இதுகுறித்த பஞ்சாயத்து வந்தபோது, “என்னை ‘கோச்சடையான்’ படத்துல நடிக்க கூப்பிட்டாங்க… நடிச்சேன். ஃபைனான்ஸ், ரிலீஸ் பிரச்னை பத்தி எனக்குத் தெரியாது… என்று கட் அண்ட் ரைட்டாக பதில் கூறி பஞ்சாயத்து பேச வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம்.