ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து வணிகர் சங்கம் போராட்டம்: மக்களிடம் எடுபடுமா?
ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் டிசம்பர் 17ஆம் தேதி வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்
ஆன்லைன் வர்த்தகத்தால் கடைகளில் வியாபாரம் செய்யும் வணிகர்களின் வணிகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 17-ம் தேதி வணிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு முடிவு கட்டப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தை பொருத்தவரை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவதால் நகரம் முதல் கிராமம் வரை தற்போது பரவி விட்டது
குறிப்பாக பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தகத்தில் 600 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 200 ரூபாய் பொருட்கள் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்படுவதால் அனைவரும் ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கி செல்கின்றனர். இதனால் உள்ளூர் மளிகை கடைகளில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை என்பதற்கு அரசுதான் முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.