சனாதான் இந்த கால சிம்ரன். ஏ.ஆர்.முருகதாஸ்ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தால் நிச்சயம் ஓரிரண்டு வருடங்களில் அவர் இயக்குராகிவிடுவார். பாரதிராஜாவுக்கு பின்னர் அதிக இயக்குனர்கள் முருகதாஸிடம் இருந்துதான் வெளிவந்துள்ளனர். அதுமட்டுமே ஒருசில உதவி இயக்குனர்களின் படங்களை அவரே தயாரிப்பார். மேலும் முன்னணி நடிகர்களிடம் அவரே தனது உதவியாளர்களை பரிந்துரை செய்வார்.
அந்த வகையில் ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியும் முருகதாசின் உதவியாளர்தான்.சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முருகதாஸ், ராஜ்குமார் பெரிய சாமியை பாராட்டியதோடு கோலிவுட்டில் வெற்றி பெறுவார் என்று வாழ்த்தினார்.
மேலும் அவர் கூறியபோது, ‘நான் அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கும் போது சிம்ரன் மேடத்தை பார்த்து வியந்திருக்கேன். அவங்களை வச்சு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அந்த ஆசை ரமணா படத்தில் நிறைவேறியது. இப்போ இந்தப்படத்தின் ஹீரோயின் சனாவை பார்த்தால் அப்படியே சிம்ரன் போலவே இருக்கிறார். அவர் இடத்தை இவரும் பிடிக்கணும் என்று வாழ்த்துகிறேன்’ என்று கூறினார். முருகதாஸின் வாழ்த்தால் முகம் சிவந்தார் ரங்கூன் நாயகி சனா