அந்த கதை அஜித்துக்கு மட்டும்தான். வேறு யாருக்கும் கிடையாது ஏ.ஆர்.முருகதாஸ்
தீனா படத்தில் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் அதன்பின்னர் கஜினி, ரமணா, துப்பாக்கி, கத்தி, ஏழாம் அறிவு உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அஜித், விஜய், அமீர்கான், மகேஷ்பாபு, விஜயகாந்த், சூர்யா உள்பட முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், விஜய், மகேஷ்பாபு, சோனாக்ஷி சின்ஹா குறித்த தனது கருத்துக்களை ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். அதுகுறித்து பார்ப்போம்.
அஜித்: ‘தீனா’ படத்திற்கு பின்னர் அஜித்துக்காக ஒரு கதை தயார் செய்து அவரது போன் காலுக்காக காத்திருக்கின்றேன். அந்த கதை அவருக்காக மட்டும்தான். அவர் நாளைக்கே ஷூட் போகலாம்னு சொன்னாக்கூட போகலாம்.
விஜய்: விஜய்யை குழந்தைகள், பெண்கள் என எல்லா குரூப் ஆடியன்ஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக இளம்பெண்கள் அவரை அண்ணன் போல நினைத்து அன்பு வைத்திருப்பது அவருடைய மிகப்பெரிய பலம்.
மகேஷ்பாபு: செம ஸ்டைலிஷ் நடிகர். பிரின்ஸ் என்ற பெயருக்கு ஏற்றவாறு அவர் செம மேன்லி. ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு ஆர்வமா, கவனமா கேட்பார். ஷாட் முடிஞ்சதும் நம்முடைய முகத்தைத்தான் பார்ப்பார். நம்ம முகத்தில் கொஞ்சம் டவுட் இருந்தாலும் `ஒன்ஸ்மோர் போலாம்’னு அவரே சொல்லிடுவார். அந்த டெடிக்கேஷன்தான் அவரோட பலம்.”
சோனாக்ஷி சின்ஹா: “ `துப்பாக்கி’ இந்தி ரீமேக் `ஹாலிடே’வுல சோனாக்ஷிதான் நாயகி. அப்போ அவங்க நடிச்ச `லூட்டேரா’ படத்தின் டி.வி.டி-யை என்கிட்ட குடுத்து, பார்க்கச் சொன்னாங்க. நிஜமா சொல்றேன், அவங்க நடிப்பு வேற லெவல்! `இந்த ஹீரோயினை வெச்சு நாம படம் எடுத்தா… அது மூணு சாங், நாலைஞ்சு லவ் சீனோட முடிக்கக் கூடாது’னு தோணுச்சு. `அகிரா’ ஆரம்பிச்சதும் எனக்குத் தோணின முதல் ஆள் சோனாக்ஷிதான்.