ரஜினி, கமல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.

ரஜினி, கமல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.
lycaa
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ போன்ற படங்களை பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான லைகா மொபைல் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டு கிளையில் அதிரடியாக ரெய்டு நடந்ததாகவும் இதில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக லைகா மொபைல் இயக்குனர் அலெய்ன் ஜோசிமெக் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் முதன்முதலாக விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் மூலம் இந்திய திரையுலகில் நுழைந்தது. அடுத்ததாக தற்போது ரஜினி, கமல் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் கடந்த வாரம் ரிலிஸ் ஆனது. மேலும் இந்த நிறுவனம் உதயநிதி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply