முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் அவர்களின் மனைவியும், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீது ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரு பெண் ஷூ தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
66 வயதான ஹிலாரி கிளிண்டன் நேற்று ஆஸ்திரேலியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென ஹிலாரி மீது ஷூவை வீசினார். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் ஷூ எரிந்த பெண்ணை வெளியே அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஹிலாரி கிளிண்டன் எவ்வித பதட்டமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே தனது பேச்சை தொடர்ந்தார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1hFAkhd” standard=”http://www.youtube.com/v/Ws7ZKiQvgHs?fs=1″ vars=”ytid=Ws7ZKiQvgHs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3035″ /]