புனேவில் இருந்து பஹ்ரைனுக்கு கிளம்பிய சிறப்பு விமானம்

எதற்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்தியாவில் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து ஜூன் 1ம் தேதி முதல் வெளிநாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் இருந்து ஒரு சிறப்பு விமானம் பஹ்ரைன் சென்றது. இதில் ஊரடங்கு உத்தரவு காரணமாக புனேவில் சிக்கியிருந்த 125 பஹ்ரைன் நாட்டு மக்களை இந்தியா அவர்களுடைய சொந்த நாட்டுக்கு இந்த சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைத்தது

பஹ்ரைன் நாட்டின் அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தியா இந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply