இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை. தீவிரவாதிகளின் கைவரிசையா?

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை. தீவிரவாதிகளின் கைவரிசையா?
tunnel
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அவ்வப்போது இந்தியாவில் ஊடுருவி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில்கூட பதான்கோட் தாக்குதல் சம்பவம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. இதற்காக பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பை இந்திய அரசு அதிகரித்திருக்கும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய தீவிரவாதிகளால் அமைக்கப்பட்ட 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், பாதுகாப்பு படையினர் நேற்று காலை 10 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் சந்தேகத்திற்கிடமான புதர்களை பார்த்தனர். அந்த புதர்களை நீக்கியபோது அங்கு ஒரு சுரங்கப்பாதையின் ஆரம்பம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்திய எல்லையில் முடியும் அந்த சுரங்கப்பாதையின் ஆரம்பம் பாகிஸ்தானில் இருந்து தொடங்குவதையும் உறுதி செய்த ரோந்து படையினர் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருந்த அந்த சுரங்கப்பதையை பார்வையிட்ட எல்லை பாதுகாப்பு படையின் ஜம்மு சரக ஐ.ஜி. ராகேஷ் சர்மா இதுகுறித்து கூறியபோத், “ஜே.சி.பி. உதவியால், சுரங்கப்பாதையை வெட்டி இருப்பதாகவும், ஒரு ஆள், எளிதாக சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை ஆங்கில எழுத்தான ‘எல்‘ வடிவத்தில் உள்ளதாகவும், மேலும் இது 30 மீட்டர் நீளமும், 12 அடி ஆழமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தீவிரவாதிகளை ரகசியமாக இந்தியாவுக்குள் அனுப்பி வைப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு எல்லை படையினரும் இணைந்து இந்த வேலையைச் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எல்லை படையினர் மறுத்து விட்டதாகவும் ராகேஷ் சர்மா தெரிவித்தார்.

தற்போது அந்த சுரங்கப்பாதையை மூட இந்திய எல்லைப்படையினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply