பேருந்து வேலைநிறுத்தத்தில் வன்முறை. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

பேருந்து வேலைநிறுத்தத்தில் வன்முறை. பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

சம்பள உயர்வு, நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இருப்பினும் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர்களின் உதவியால் 20 முதல் 30 சதவிகித பேருந்துகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை மீறி பேருந்துகளை இயக்கி வருவதால் ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்கள் ஆத்திரம் அடைந்து பஸ்கள் மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னை அண்ணாநகர், போரூர், ஓட்டேரி ஆகிய இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் பதட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நேற்றிரவு வெளியூரில் இருந்து சென்னைக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்துள்ள பயணிகள் வீட்டிற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ,இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பலமடங்கு கட்டணங்கள் கேட்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Leave a Reply