தீக்குழம்பை கக்கிய பாலித்தீவு எரிமலை: விமான நிலையம் மூடல்
இந்தோனோஷியா நாட்டில் உள்ள பாலி தீவில் பகுதியில் மவுன்ட் ஆகங் என்ற எரிமலை, தீக்குழம்பை கக்கி வருவதால் அருகிலிருந்த விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடும் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,.
உலகின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறனர். இங்குள்ள ஆகங் எரிமலை அடிக்கடி தீக்குழம்பை கக்குவது வழக்கம். இந்த முறையும் இந்த எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதன் சீற்றத்தில் வெளியேறும் சாம்பல்கள் நான்கு ஆயிரம் மீட்டர் வரை செல்வதாகக் கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் இது இரண்டாவது முறை இது நிகழ்கிறது. இந்த சாம்பல்கள் விமானத்தின் என்ஜினை பாதிக்கும் என்பதால், பாலியின் கிழக்கு பகுதியில் உள்ள லோம்போக் தீவில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. அங்கு வந்து செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.