மேல்முறையீடு செய்தால் வெற்றி நிச்சயம். கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா கடிதம்.

aacharyaஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்த கருத்தை தெரிவிக்குமாறு கர்நாடக அரசு, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் நேற்று கருத்து கேட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள ஆச்சார்யா, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\

இதுகுறித்து  அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கணக்கீட்டில் குளறுபடிகள் உள்ளது அரசுத் தரப்புக்கு சாதகமான அம்சம் ஆகும். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை வழங்கிய பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பே சரியானதாகும். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு வாய்மொழியாக வாதம் செய்ய வாய்ப்புத் தரப்படவில்லை. இது சட்ட ரீதியாக பாரபட்சமான நடவடிக்கை. எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய ஒரு வழக்கு என ஆச்சார்யா தனது கடித்ததில் தெரிவித்துள்ளார்.

ஆச்சார்யாவின் பரிந்துரையை அடுத்து கர்நாடக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும். அதன்பின்னர்தான் ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply