ஆதார் அட்டை விண்ணப்பத்தை காசு கொடுத்து வாங்கவேண்டாம். சமூக ஆர்வலர்கள் ஆலோசனை.

aadhaarஅரசின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை பிரதானமாக இருப்பதால் இதுவரை ஆதார் அட்டையை பெறாத பொதுமக்கள் ஆதார் அடையாளயை பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி இலவசமாக வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை விண்ணப்பத்தை ரூ.50க்கு விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தற்போது பற்றாக்குறையாக உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அதிகளவில் மத்திய அரசு வெளியிட உள்ளது. இந்த பற்றக்குறையை பயன்படுத்தி ஆதார் அட்டை விண்ணப்பங்களை சேலத்தில் ரூ.50க்கு ஒருசிலர் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஆதார் விண்ணப்ப படிவத்தின் நகல் கன ஜோராக விற்பனை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைகளிலும், சிலரும் விண்ணப்பபடிவ நகலை, மக்களிடையே ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.  ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையம் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதையும் புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டியவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் இலவசமாகவே டவுண்லோடு செய்துகொள்ளலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply