பி.எப். கணக்குகளுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசு அறிவிப்பு

aadhaarபிராவிடண்ட் பண்ட் எனப்படும் (பி.எப்) கணக்குகளுக்கு ஆதார் அட்டை விபரங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் ஐந்து கோடி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப் சந்தா செலுத்தி வருகின்றனர். இதற்கு ஆதார் எண்ணையே பி.எப் கணக்கு எண்ணாக பயன்படுத்த முதலில் முடிவெடுக்கப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று ராஜ்சபாவில் கேள்வி நேரத்தின் போது பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டுமா? என்று எம்.பி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா,  பி.எப். சந்தாதாரர்கள் ஆதார் அட்டை விபரங்களை கட்டாயமாக அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

Leave a Reply