இரயில் பயணம் செய்ய ஆதார் அட்டை தேவை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக கருதப்படும் ஆதார் கார்டு இல்லையென்றால் இனி எதுவுமே நடக்காது என்பது போல அனைத்தை ஆவணங்களிலும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இனிமேல் ரயில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கூட ஆதார் எண் வேண்டும் என்று ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ரயிலில் முன்பதிவு செய்த பயணியர், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, – ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக காட்டலாம். ஏற்கனவே முன்பதிவு செய்த பயணியர், ரயில் பயணத்தின்போது, அடையாள அட்டையை கட்டாயம் காட்ட வேண்டும்.
தற்போது, இந்த அடையாள அட்டை வரிசையில், ஆதார் அட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட, இ – ஆதார் அட்டையை காண்பிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தவிர. , வாக்காளர் அடையாள அட்டை.பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசுடமையாக்கப்பட்ட வங்கி பாஸ்புக் போன்றவற்றையும் காண்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.