ஆதார் அட்டை எண் கட்டாயம் அல்ல. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஆதார் அட்டை எண் கட்டாயம் அல்ல. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Aadhar-Card-400x226நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு பலகோடி ரூபாய் செலவில் ஆதார் அட்டைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை தேவை என்ற கட்டாய நிலை வரும் என்பதால் ஆதார் அட்டைகளை பெறுவதில் பொதுமக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒருசில சலுகை மற்றும் உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயம் என அரசு பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. இந்நிலையில் “அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் பெறுவது கட்டாயமல்ல என்று அதிரடியாக அறிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் அதே நேரத்தில் பொது விநியோக திட்டம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம் என்று கூறியுள்ளது.

மத்திய, மாநில அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.போப்டே, சி.நாகப்பன், ஆதார் அட்டை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதன் பிறகு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பிற்பகலில் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் “ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம்  தெரியப்படுத்த வேண்டும். பொது விநியோகம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தனி மனித தகவல்களை வெளிநபர்களுக்கு வழங்கக் கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply