வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை. அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் விரைவில் ஆதார் அட்டை வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோது ”வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் வளர்ச்சியிலும் அவர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். அவர்கள் தங்கள் சாதனைகளை இந்தியாவுக்கு உரித்தாக்குகின்றனர். இது இந்தியாவிற்கு பெருமையாக இருக்கிறது. அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை.
மத்திய அரசு இதுவரையில் 92 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கியுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் விரைவில் ஆதார் அடடை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்