ஆதார் அட்டையில் திருத்தம் மிக எளிது

புதிய தகவல்

இந்த ஊரடங்கு நேரத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகளை பெறுவதற்கு முக்கிய தேவையாக ஆதார் அட்டை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆதார் தகவல்களுடன் ஆவணத்தில் உள்ள தகவல்களும் சரியாக இருந்தால் மட்டுமே சலுகைத்தொகை கிடைக்கின்றது

இந்த நிலையில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு தற்போதைய முறை சிக்கலாக இருப்பதால் அதை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து தற்போது நாடு முழுவதும் 20 ஆயிரம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

இந்த சேவை மையத்தில் ஆதார் அட்டையில் உள்ள முகவரி திருத்தம் உள்பட அனைத்து திருத்தங்களையும் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இனிமேல் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை திருத்துவது என்பது மிக எளிதாக அமையும் என்றும் கிராமப்புற மக்கள் பலர் இந்த சேவையினால் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த பொது சேவை மையங்கள் இன்னும் கூடுதலாக திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply