திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.
திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்தஇக்கோயிலில், கும்பாபிஷேகத்திற்காக, திருப்பணிகள் நடந்து வந்தன. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ஜூன் 29 ல்காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, கோயில் முன் உள்ள கோபுரமும், சிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோயிலின் உட்புற பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணிகளும், சுத்தம் செய்யும் பணிகளும், யாகசாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.