122 எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டமா?

122 எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டமா?

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்த 122 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தொடர்ந்து மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதால் ஒருசிலர் வேறு வழியின்றி ஓபிஎஸ் அணிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் அணிக்கு தூது விட்டிருப்பதாக கூறப்படும் தகவலால் அதிமுக தலைமை கதிகலங்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று உடனடியாக சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளதாகவுகவும், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடைபெறும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் பிறந்த தினம் முதல் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து வருவதால் அவர் பக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இன்றைய கூட்டத்தை டிடிவி தினகரன் கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply