விஜயகாந்த்-மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு இல்லை. ஆம் ஆத்மி திட்டவட்டம்
மக்கள் நலக்கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளதால் விஜயகாந்த் உள்பட மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு ஆதரவு தருமாரு மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஆம் ஆத்மி நிர்வாகி வசீகரனை நேரில் சந்தித்து பேசிய வைகோ, வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் – மக்கள் நலக்கூட் டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார்.
ஆனால் ஆம் ஆத்மி தொண்டர்கள், மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கூடாது என்று கருத்து தெரிவித்ததால் விஜயகாந்த் அணிக்கு ஆதரவு இல்லை என்று ஆம்ஆத்மி கட்சி உறுதியாக அறிவித்துள்ளது. தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க தேமுதிக+மக்கள் நலக்கூட்டணிக்கு ஆம் ஆத்மி ஆதரவளிக்கவில்லை என்று கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர் சோம்நாத் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபை தேர்தல் நிலவரங்களை ஆம் ஆத்மி கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழல் தான் மிகப் பெரியதாக சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. எனவே தமிழகத்தில் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. எனவே இந்த நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் இந்த முடிவு மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறதுஜ்.