டெல்லி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏவின் மண்டையை உடைத்த மர்ம நபர் யார்?

டெல்லி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏவின் மண்டையை உடைத்த மர்ம நபர் யார்?

mlaஆம் ஆத்மி கட்சி பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியின் மிகவும் பரபரப்பான பகுதியான ராஜ்காட் பகுதியில் அல்கா லம்பா நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென எம்.எல்.ஏ மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அல்காவின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் வந்து தாக்குதல் நடத்திய நபரை கண்டுபிடிக்க டெல்லி போலீஸார் தீவிர வேட்டையில் உள்ளனர்.

Leave a Reply