பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டு சேரும் ஆம் ஆத்மி

பாஜகவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டு சேரும் ஆம் ஆத்மி

நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து வந்த ஆம் ஆத்மி தற்போது பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. பல வழிகளில் முயற்சித்து தோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு குறைத்து அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. அசுத்தமான அரசியல் செய்வதாகவும், பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக டெல்லி மக்களை வஞ்சிக்க வேண்டாம் எனவும் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply