எங்களோடு வாருங்கள். முதலமைச்சர் பதவி தருகிறோம். ஆம் ஆத்மி அழைப்பு விடுத்தது யாரை?
மணிப்பூரில் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா சமீபத்தில் தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணைந்ஃதால் விரைவில் வெளிவரவுள்ள மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் அவர் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை போலவே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரோம் ஷர்மிளா சுயேட்சையாக நின்றே முதலமைச்சர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார்.