டெல்லியில் வெற்றி: பாஜகவினர் கொண்டாட்டத்தால் பரபரப்பு
டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்து 30க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு காரணம் காங்கிரஸும் பாஜகவும் என பாஜகவும் காங்கிரசும் மாறிமாறி குற்றம்சாட்டி வந்தன
இந்த நிலையில் திடீரென இந்த கலவரத்துக்கு முக்கிய காரணமாக ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் என்று பாஜகவினர்களால் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக தாஹிர் உசேன் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என கூறப்பட்டது
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் தவறு செய்தால் அவர்களுக்கு இரட்டை தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதுமட்டுமின்றி அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. தாஹிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை ‘வெற்றி’ என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.