துப்புரவு தொழிலாளர் வேலை நிறுத்தம். குப்பை நகரமாக மாறிய தலைநகரம்.

delhi broomsடெல்லியில் கடந்த பத்து நாட்களாக துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்து தலைநகரமே குப்பை நகரமாக மாறி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குப்பைகளை அகற்ற அரசியல் கட்சி தொண்டர்களே களம் இறங்கியுள்ளனர்.

ஆனால் இதிலும் ஊடகங்களில் தங்கள் கட்சிதான் குப்பைகளை அகற்றியது என்ற பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு குப்பைகளை அகற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் பிரச்னை குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர்களுக்கான ஊதிய தொகையை உடனே வழங்குமாறு ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கும், இதற்காக 493 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவித்துள்ளார்.

இதனால் துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டு இன்றுமுதல் வேலைக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை டெல்லியில் அடித்த பயங்கரமான சூறாவளி காற்றால் குப்பைகள் நகர் முழுவதும் பரவி பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சலை கொடுத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றது.

Leave a Reply