ஆரணி தொகுதியின் அதிமுக மாவட்ட செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று காலை தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அ.தி.மு.க.வின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க. கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.வுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஆரணி சட்டமன்ற தொகுதி செயலாளர் பையூர் ஏ.சந்தானம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆரணி தொகுதியின் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் அப்பகுதி அதிமுகவினர் பெரும் பரபரப்பு அடைந்தனர்.