பிரதமரின் அதிரடி அறிவிப்பை முன்னரே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று நேற்றிரவு பிரதமர் மோடி அறிவித்தவுடன் அனைத்து இந்திய மக்களுக்கும் கடும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் மிக ரகசியமாக இந்த விஷயம் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து இவ்வருட ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.
ஆற்காடு பஞ்சாங்கத்தில் உள்ள 12ஆம் பக்கத்தில் ‘நவம்பர் 9 ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதிக்குள் வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் கணக்கில் இல்லாத கருப்பு பணம் வெளியே வரும் என்றும் தணிக்கை துறையின் மூலம் அரசாங்கத்தின் கஜானாவிற்கு பல கோடி பணம் வந்து சேரும் என்று குறிபிடப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் செய்திகள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.