கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிருத்விராஜ், ஆர்யா நடித்த உருமி என்ற திரைப்படம் தமிழ், மற்றும் மலையாள மொழிகளில் வெளியானது. தற்போது மீண்டும் பிருத்விராஜ் மற்றும் ஆர்யா இணைந்து டபுள் பேரல் என்ற படத்தில் நடிக்கின்றனர்.
லிஜோ ஜோஸ் பெல்லிசெரி அவர்களின் இயக்கத்தில் டபுள் பேரல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஆர்யா, ஸ்வாதி ரெட்டி மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழில் இரட்டைக்குழல் என்ற பெயரிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறாது.
பிரசாந்த் பிள்ளை இசையமைப்பில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் டபுள் பேரல் உருவாகி வருகிறது. வரும் டிசம்பரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நவம்பரில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜோஸ் பெல்லிசெரி, பிருத்விராஜ் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
முதலில் ஆர்யா நடிக்கும் கேரக்டரில் நஸ்ரியாவின் கணவரும் பிரபலநடிகருமான பகத் பாசில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பகத் பாசில் திடீரென இயக்குனரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நஸ்ரியாவுடன் தேனிலவுக்கு அமெரிக்கா சென்றுவிட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அதிரடியாக ஆர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக பகத் பாசிலுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் முடிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மாற்ற்த்தால் நஸ்ரியாவும், பகத் பாசிலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.