புரட்டாசி ஞாயிற்றுக் கிழமையையொட்டி, காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள் அருள்பாலித்தார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.